
தம்ப முள்ளந்தண்டழல்அல்லது மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம் (Ankylosing spondylitis) (AS , என்பது கிரேக்க சொல்லான ஆன்கைலோஸ்- வளைந்த; இஸ்பாண்டிலோஸ் - முதுகெலும்பு) என்ற சொற்களில் இருந்து உருவானது. முன்பு பெச்டெரீவ்ஸ் குறைபாடு (Bekhterev's disease) , பெச்டெரீவ்ஸ் அறிகுறி (Bekhterev syndrome) , மற்றும் மேரி ஸ்ட்ரம்பல் குறைபாடு (Marie-Strümpell disease) என்று அறியப்பட்டது. முதுகெலும்பு வாதத்தின் (spondyloarthritis) ஒருவடிவமான இந்நோய், நாள்பட்ட, வீக்கம் நிறைந்த வாதநோயாகும்[1]. தன்னெதிர்ப்புத் தாக்குதல் இந்நோயில் முக்கியப் பங்குவகிப்பதாகக் கருதப்படுகின்றது[2]. இது முக்கியமாக, முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் மற்றும் இடுப்புக்கூட்டில் உள்ள திரிக-பின் இடுப்பு மூட்டைப் (sacroiliac joint) பாதிக்கிறது. மேலும், இது முதுகெலும்பு மூட்டுகள் ஒன்றாக சேர்ந்துகொள்ளவும் வழிவகுக்கக்கூடும்.
அறிகுறிகள்